Home /News /education /

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு! 

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு! 

(கோப்பு படம்)

(கோப்பு படம்)

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ள 1747 ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியில்  உள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வை முடிக்க வேண்டும் என்பது விதியாகும்.

கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்தியது அதனை தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அச்சட்டத்தை தமிழகத்தில்  நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதன்படி தமிழகத்தில் 2010-ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு   அரசு மற்றும் அரசு  உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றக் கூடியவர்கள்  TET  தேர்வினை முடித்திருக்க வேண்டும் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட TET தேர்வை பள்ளிக்கல்வித்துறை கடைசி வாய்பாக நிர்ணையத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வருவதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்தது.

இதனையடுத்து கடந்த 18-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களின்  விவரங்களை கேட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இதனால் அந்த ஆசிரியர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1747 ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக தனியாக தகுதித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

1747 ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வினை முடிகின்ற வகையில் தமிழ்நாடு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TET, TRB

அடுத்த செய்தி