Home /News /education /

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது...!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது...!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

2003ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகளை எழுதவும் தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் டிசம்பர் மாதம் நடத்தக்கூடிய தேர்வுகளுக்கு அட்டவணை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tnou.ac.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் வரும் 17-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுகின்றன. செய்முறை தேர்வுகள் 12ஆம் தேதி டிசம்பர் முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

மேலும், 2003ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகளை எழுதவும் தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Also read... அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு கோரி வழக்கு - பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!



தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு அரியர் மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கி இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகம் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகளையும் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: University

அடுத்த செய்தி