கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! முதல் மூன்று இடங்களில் மாணவிகள்

பி.வி.எஸ்.சி படிப்புகளுக்கு 14695 பேரும், பி.டெக் உணவு தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2427பேர் என மொத்தம் 17,122 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

news18
Updated: July 3, 2019, 10:28 AM IST
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! முதல் மூன்று இடங்களில் மாணவிகள்
கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
news18
Updated: July 3, 2019, 10:28 AM IST
கால்நடை மருத்துவ படிப்புக்களுக்கான 2019-2020 ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

பி.வி.எஸ்.சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். அந்த மூன்று மாணவிகளும் 200-க்கு 199 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.


முதல் இடத்தை தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியும், இரண்டாம் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜேன் சில்வியாவும், மூன்றாம் இடத்தை  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஹர்ஷாவும் பிடித்துள்ளார்.

பி.வி.எஸ்.சி படிப்புகளுக்கு 14,695 பேரும், பி.டெக் உணவு தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2427பேர் என மொத்தம் 17,122 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆன்லைன் மூலமாக கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு மே மாதம் 8-ம் தேதி முதல் ஜூன் மாதம் 17-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடதக்கது.

Loading...

Also see...

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...