ஹோம் /நியூஸ் /கல்வி /

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் தேர்ச்சி விகிதம் குறைவு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

கடந்த ஐந்து கல்வி ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ /மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பத்து மற்றும் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 10 மற்றும்  12  ஆம் வகுப்பு மாணவ/ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தும் இந்த கல்வி ஆண்டில் சூளைமேடு சென்னை அரசு உயர்நிலை பள்ளியில் மட்டுமே 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த கல்வியாண்டுகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே பள்ளியில் மட்டுமே 100 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2021- 2022 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 86.53 சதவீதமும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 75.84 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கடந்த 5 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்த வரையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் கடந்த 2016-17 (93.07%), 2017-18 (93.36%), 2018-19 (92.44%), 2019-20 (100%), 2020-21 (100%) 2021-22 (86.53) ஆக உள்ளது.

அதே போல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் கடந்த 2016-17 (88.74%), 2017-18 (88.79%), 2018-19 (90.49%), 2019-20 (85.80%),  2020-21 (100%), 2021-22 (75.84%) ஆக உள்ளது.

அரசு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில், மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா நாளை மறுநாள் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: 10th Exam Result, 12th Exam results, Public exams