NET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது...!

NET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: March 16, 2020, 10:33 AM IST
  • Share this:
உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC - NET மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான CSIR - NET ஆகிய தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது இன்று தொடங்கியது.

நாட்டில் உள்ள  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறவும் NET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

அந்த வகையில் உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC - NET மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான CSIR - NET ஆகிய தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவானது இன்று தொடங்கியது.


உதவிப் பேராசிரியர் பணிக்கான UGC - NET தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான CSIR - NET தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று NTA அறிவித்துள்ளது.

www.nta.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணங்களை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.நடப்பாண்டு உதவி பேராசிரியர் பணிக்கான NET தகுதித் தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள்  உதவித்தொகை பெறுவதற்கான NET தகுதித்தேர்வு ஜூன் 21-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. NET தேர்வு முடிவுகள் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading