பொறியியல் கலந்தாய்வில் மெக்கானிக்கல், சிவில் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவுற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

பொறியியல் கலந்தாய்வில் மெக்கானிக்கல், சிவில் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது
(கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: October 28, 2020, 5:51 PM IST
  • Share this:
கடந்த அக்டோபர் 8-ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் மொத்தமுள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் 1,63,154 இடங்கள் உள்ளன. இதில் 71,595 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் எப்போதும் மாணவர்களிடையே வரவேற்பு உள்ள மெக்கானிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

300 கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கான பொதுப்பிரிவு இடங்களில் மாணவர்கள் சேரவில்லை. அதேபோல 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிவில் பாட பிரிவிற்கான பொதுப்பிரிவு இடங்கள் காலியாக உள்ளன.

இதன் காரணமாக அந்த கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.


Also read... 10 மற்றும்12-ம் வகுப்பு தனித்தேர்வில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி...!இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஈசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் இந்த ஆண்டு அதிகம் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மேலும் மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுவதும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவதற்கான காரணமாக முன்வைக்கிறார். இருப்பினும் மெக்கானிக்கல், சிவில் பாடங்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் கூறுகிறார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading