முகப்பு /செய்தி /கல்வி / JEE Main 2022 Results: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..

JEE Main 2022 Results: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..

காட்சிப் படம்

காட்சிப் படம்

JEE Mains Exam Results : ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

  • Last Updated :

2022 ஏப்ரல் மாத ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் JOINT ENTRANCE EXAMINATION (MAIN) – 2022 SESSION 1 (JUNE 2022):  வெளியிடப்பட்டன. தேர்வு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, ஏப்ரல், மே என்ற இரண்டு மாதங்களில் மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். எனவே, தற்போது ஏப்ரல் மாத தேர்வுக்கான மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே மாத தேர்வு முடிவுற்ற பின்பு தான், முழு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் 2022- 23 கல்வியாண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என்று  தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்தது.  அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான தேர்வு ஜூன் 23,24,25,26,27, 28, 29 ஆகிய 7 நாட்களில் நாடு முழுவதும்  501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். Download Score Card of JEE(Main) Session 1_Paper 1 என்ற இணைப்பில் சென்று விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி, இரகசிய எண் ஆகிய விவரங்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

நாட்டில் உள்ள 31  தேசிய தொழில்நுட்பக் கழகம் , மேற்குவங்காளத்தின் ஷிப்பூரிலுள்ள இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம்,   26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs), மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் நடத்தப்படும்.

இதையும் வாசிக்க தொழில் கல்வி மாணவர்கள் உயர்கல்வியோடு ஒருங்கிணைக்கும் முயற்சி: ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு

top videos

    கூட்டு இட ஒதுக்கீடு ஆணையம் (Joint Seat Allocation Authority) இந்த கலந்தாய்வை  மேற்கொள்கிறது. இந்தாண்டிற்கான கலந்தாய்வு 6 மட்டங்களாக நடைபெறும். விண்ணப்ப பதிவு, பணம் செலுத்துதல், இடத்தை தேர்ந்தெடுத்தல், உறுதிப்படுத்துதல் ஆகிய அனைத்தும் ஆன்லைன் முறையில் முழுமையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Education, Jee