Home /News /education /

காரைக்குடி பல்கலை.யில் தீனதயாள் உபாத்தியாயா பெயரில் ஆராய்ச்சி இருக்கை!

காரைக்குடி பல்கலை.யில் தீனதயாள் உபாத்தியாயா பெயரில் ஆராய்ச்சி இருக்கை!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்

ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கக்கூடியவர்களின் பெயர்களில், ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்கப்படும்.

  • News18
  • Last Updated :
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் பற்றுகொண்ட தீனதயாள் உபாத்தியாயா பெயரில் ஆராய்ச்சி இருக்கை தொடங்கப்பட்ட விவகாரம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கக்கூடியவர்களின் பெயர்களில், ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்கப்படும்.

அதனடிப்படையில் காரைக்குடி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான பண்டித தீனதயாள் உபாத்தியாயா பெயரில் 2019ம் ஆண்டு, யுஜிசி நிதி பங்களிப்புடன் ஆராய்ச்சி இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Also read... கொரோனா அதிகரித்துள்ளதால் 10 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை கோரி வழக்கு... மனுதாரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

ஆராய்ச்சி இருக்கைகள் ஆரம்பிக்கும்போது அந்த தலைவர்கள் எந்தவிதமான அடையாளங்களுக்கு உட்படாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தீனதயாள் உபாத்தியாயாவை பொறுத்தவரை இந்துத்துவா கொள்கைகளில் அதிக ஈடுபாடுடையவர் என்பதால் இது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

உபாத்தியாயா இருக்கை சார்பில், புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்த கருத்தரங்கையும் அழகப்பா பல்கலைக்கழகம் கடந்தாண்டு நடத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Education

அடுத்த செய்தி