• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 17ஆம் தேதி வரை, நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு, நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்விற்கான, முதல் சுற்றில் தரவரிசைப்பட்டியிலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை இடம் பெற்றவர்களுக்கு, இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, 6,442 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனிடையே, தொழிற்கல்விப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும், இன்று தொடங்கி அக்டோபர் 5ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

    பொறியியல் படிப்பில் பி.இ, பி.டெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டது. 1,74,490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த போதும், 1,45,045 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தகுதியான 1,39,033 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இவர்களில் பொதுப்பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கான கலந்தாய்வு அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு 2 நாட்களும், கல்லூரிகளை தேர்வு செய்ய 2 நாட்களும், தற்காலிக ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய 2 நாளும், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும் ஒவ்வொரு சுற்றுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

    தரவரிசைப்பட்டியிலில் 1 முதல் 14,788 வரை பெற்றவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தரவரிசைப் பட்டியிலில் 14,789 முதல் 45,227 வரை பெற்றவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரையில் 2 வது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

    Must Read : அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

    இந்நிலையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் 6,442 இடங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: