பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண் இந்தாண்டு 10 மடங்கிற்கு மேல் அதிகரிக்கும்

கோப்புப் படம்

கடந்த ஆண்டு 179 கட் ஆப் பெற்ற மாணவருக்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டு 196.5 கட் ஆப் பெற்ற மாணவருக்கு கிடைக்கும்.

  • Share this:
பொறியியல், தொழிற் படிப்புகளான கால்நடை மருத்துவம், சட்ட படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களும்  இந்த ஆண்டு உயருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார் . இந்த ஆண்டு  நூறு சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அறிவியல் பாடப்பிரிவில் 551-600 மதிப்பெண்கள் வரை இந்த ஆண்டு  30,599 மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர். இந்த  மதிப்பெண்களை கடந்த ஆண்டு 1867  மாணவர்கள் பெற்றிருந்தனர். அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அதிக  மதிப்பெண்களைப் பெற்று இருக்கக் கூடிய நிலையில் பொறியியல் படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 10 மடங்கிற்கு மேல் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read : அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!

உதாரணமாக கடந்த ஆண்டு 150 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு கிடைத்த பொறியியல்  பாடப்பிரிவு இந்த ஆண்டு 170 கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவருக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
.
அதேபோல கால்நடை மருத்துவம் சட்டபடிப்புகளிலும் கட் ஆஃப் உயர வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் 12-ம் வகுப்பு மதிப்பெண் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Also Read : பக்ரீத் பண்டிகையை ஒட்டி களைக்கட்டும் ஆட்டு சந்தை!

கொரோனோ காலகட்டத்தில் தமிழக அரசு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தெளிவான வழிமுறையை பின்பற்றி மாணவர் நலனை பாதுகாக்கும் வகையில்  மதிப்பெண் முறையை கணக்கிட்டு  வழங்கியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: