முகப்பு /செய்தி /கல்வி / 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை...!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை...!

 பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை

கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றது.

கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மே 2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

அதனைத்தொடர்ந்து அடுத்த நாளே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் பங்கேற்பதன் காரணமாக மே 3 -ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.

Also read... இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் - ராதாகிருஷ்ணன்!

இதன்காரணமாக பொதுத்தேர்வை சில நாட்கள் தள்ளி வைக்க பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்கிறது. மேலும் தற்போது கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மே மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: 12th exam