அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்..

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்..
கோப்பு படம்
  • Share this:
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது

வழக்கமாக அரசு கலை அறிவியல்  கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மாணவர் சேர்க்கைகாவும்  நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக அதிகளவு மாணவர்கள் திரள்வார்கள்.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக அதிகளவு மாணவர்கள் கல்லூரிகளில் திரள்வதை  தடுக்கும் வகையில் தற்போது ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Also read... டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அரசின் நல்லாசிரியர் விருது கிடையாது

இதற்கான பிரத்யேக மென்பொருள் ஒன்றை வடிவமைக்கும் பணியில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தபின் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பானைகள் மாணவர்களுக்கு  அனுப்பப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading