குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வியாண்டிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே, குறிப்பிட்ட வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களை தேர்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால்,
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எவ்வித அழுத்தமும் இன்றி, பொதுதேர்வுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுத்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் வெளியானதை தொடர்ந்து, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பொதுத்தேர்வு நடைபெறும் என, தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.