நீட் தேர்வுக்கான விண்ணப்பம் குறித்து விரைவில் அறிவிப்பு
நீட் தேர்வுக்கான விண்ணப்பம் குறித்து விரைவில் அறிவிப்பு
நீட் தேர்வு
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நீட் தேர்வுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு nta.ac.in , neet.nta.nic.in என்ற இணையதளங்களில் வெளியாகும். இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களும் ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நீட் தேர்வுக்கு nta.ac.in மற்றும் meet.nta.ac.in என்ற இணையதளங்களில் வெளியாகும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் மாணவர்கள் புகைப்படம், அரசு அடையாள அட்டை, இடது கட்டை விரல் ரேகை ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
நீட் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.