தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை - நீதிமன்றம்
தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை - நீதிமன்றம்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாதென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும், எனக்கூறி மதுரை மற்றும், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, இது குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் வரும் 24-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.