கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வழியில் தொடங்கியது. ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்சி முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதனை அடுத்து நேற்றுடன் (27ம் தேதி) பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்தது.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு 1,74,071 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நடப்பாண்டில் 2,11 115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டு 1,38,053 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்து 1,56,214 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதே சமயம் 1,67,387 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க கட்டணங்களை செலுத்தியுள்ளனர். இந்த மாணவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 1,35,554 பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்தாண்டு 80,524 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகரித்து சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐடி ,கணினி அறிவியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இசிஇ ஆகிய படிப்புகளுக்கு கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டுகளிலும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதேபோல கொரொனோ காலகட்டத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் ஐடி உள்ளிட்ட துறைகள் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளதால் வேலை வாய்ப்பும் கணிசமாக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
Must Read : குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்; 2 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உயரிழப்பு
இதனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்து வந்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Engineering, Engineering counselling, Engineering student