• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் பத்தாம் வகுப்பு பாடங்கள்..!

பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் பத்தாம் வகுப்பு பாடங்கள்..!

பொதிகை டிவி

பொதிகை டிவி

விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாட்களுக்குள் பொதுத்தேர்வினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த 10-ம் வகுப்பு பாடங்கள் நேற்று முதல் டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.

மார்ச் 27-ஆம்  தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கின் காரணமாக 10-ஆம் பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் பயனடையும் வகையில் நாளை நேற்று முதல் பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட வாரியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றது.

மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையினை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே 2-வது வாரத்தில் ஒவ்வொரு தேர்விற்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாட்களுக்குள் பொதுத்தேர்வினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: