Home /News /education /

6 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி.. தமிழக அச்சக நிறுவனங்களுக்கே முழு ஆர்டர்

6 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி.. தமிழக அச்சக நிறுவனங்களுக்கே முழு ஆர்டர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil Nadu Textbook And Educational Services Corporation : அனைத்து ஆர்டர்களும் தமிழகத்தை சேர்ந்த 97  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட 6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்து இருப்பதாகவும், பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி முழுக்க முழுக்க தமிழக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 6 கோடி பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் விரைவில் முடிகிறது.

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அச்சிடும் டெண்டர், முழுக்க முழுக்க தமிழகத்தை சேர்ந்த  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக, பிற மாநில நிறுவனங்களுக்கு இந்த முறை ஆர்டர் வழங்கவில்லை.  தமிழக அரசு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள், வழக்கமாக தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஆர்டர் கொடுப்பது வழக்கம்.

Also Read :  திருநங்கைகளுக்கு கல்லூரியில் ஒரு இலவச சீட்..! - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் சிவகாசி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் அச்சக நிறுவனங்கள் இருக்கின்றன.  இந்த நிறுவனங்கள் தங்களுக்கே  பணிகள் இல்லாத நேரத்தில், பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி, வந்தததோடு முழுக்க முழுக்க அனைத்து பணிகளையும் தமிழக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாடநூல் கழகத்திடம் கோரிக்கை வைத்திருந்தன.

இந்த நிலையில், தற்போது அனைத்து ஆர்டர்களும் தமிழகத்தை சேர்ந்த 97  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட 6 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்து இருப்பதாகவும், பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த முறை தமிழகம் தவிர்த்து வேறு எந்த மாநில நிறுவனங்களுக்கும் ஆர்டர் வழங்கவில்லை என்றும் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Also Read: TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்? கடைசி தேதியை நீட்டிக்க கோரும் தேர்வர்கள்!

ஏற்கனவே கொரோனா காரணமாக அச்சகத் தொழிலும் கடுமையான பாதிக்கப்பட்டு தொழில்களை செய்ய முடியாத சூழல் இருந்த வந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தமிழகத்தை சேர்ந்த அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அந்த நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்

 
Published by:Ramprasath H
First published:

Tags: Education, Tamil News, Tamilnadu

அடுத்த செய்தி