முகப்பு /செய்தி /கல்வி / ஆசிரியர் தகுதித் தேர்வு: போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது

ஆசிரியர் தகுதித் தேர்வு: போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது

போராட்டம்

போராட்டம்

TET Candidates Protest: காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் நியமன மறு தேர்வுக்கான 149 அரசாணை ரத்து செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தொடர் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, அங்கு  காவல்துறை குவிக்கப்பட்டனர்.

காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்புறப்படுத்த  எதிர்ப்பு தெரிவிப்பதால் காவல்துறை குண்டுகட்டாக தூக்கி கைது செய்கின்றனர். போரட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அரசாணை 149 – ஐ ரத்து செய்து வேண்டும், பணி நியமன வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சிப் பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: TNTET