ஹோம் /நியூஸ் /கல்வி /

பண்டிகை லீவு வேணும்.. மாணவர்களுக்கு முன் முந்திக்கொண்ட ஆசிரியர்கள்

பண்டிகை லீவு வேணும்.. மாணவர்களுக்கு முன் முந்திக்கொண்ட ஆசிரியர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன .

ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படும். புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், பாடத்திட்டங்கள் முடிக்க முடியாத நிலை இருப்பதாலும் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  தாமதமாகும் எம்.இ., எம்.டெக் கலந்தாய்வுகள்.. தவிக்கும் மாணவர்கள்

இந்நிலையில் வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரி பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடக்கம்

First published:

Tags: Christmas, New Year, School Holiday, School Leave, School Teacher