Home /News /education /

பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கிய ஆசிரியர் ராமச்சந்திரன்

பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கிய ஆசிரியர் ராமச்சந்திரன்

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடவுள்ளார்.

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடவுள்ளார்.

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான இன்று, ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில்  தேசிய நல்லாசிரியர் விருதுகளை நாட்டின் குடியரசுத் தலைவர்  வழங்கினார்.

    தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்   நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விழாவில், அரசுப்பள்ளி சீருடையிலேயே விருது வாங்கிய சம்பவம் காண்போர் அனைவரையும் கவர்ந்தது.

    ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தின்று, குடியரசுத் தலைவர் கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நல்லாசிரியர் விருதை வழங்கி வருகிறது.

    பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத்திட்டங்களில் புத்தாக்கம், தேச வளர்ச்சிக்கான பணிகள் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையிலும் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு விருதுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிட்டத்தட்ட 3 அடுக்கு ஆய்வுக்குப் பின் நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்


    முன்னதாக,  குடியரசுத் தலைவர் மாளிகையில், உள்ள  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்.

    தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆசிரியர்களுக்கு வாழ்த்துக் கூறிய அவர் ,"  “ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Teachers

    அடுத்த செய்தி