ஹோம் /நியூஸ் /கல்வி /

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பிறகும் விவரங்களை வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் கேள்வி!

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பிறகும் விவரங்களை வெளியிடாதது ஏன்? ஆசிரியர்கள் கேள்வி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது குறித்த விவரங்களை வெளியிட்டால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமமின்றி தயாராக முடியும் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிடாததால் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்ப்படுவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனோ காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது இதனையடுத்து ஆன்-லைன் வழியில் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை கருத்தில் கொண்டு பாட திட்டங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

இதனையடுத்து தற்போது 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 50சதவிகித பாடத்திட்டங்களும் 10ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 35 சதவிகித பாடத்திட்டங்களும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைக்கப்பட்ட திட்டங்கள் எவை என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த தாமதம் ஆசிரியர்கள் சரியான பாடங்களை தயார் செய்வதிலும் கொரோனோ காலத்தில் மாணவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்க வழிவகை செய்யவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Also read... Gold Rate | தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை என்பது குறித்த விவரங்களை வெளியிட்டால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமமின்றி தயாராக முடியும் என்றும் கூறுகின்றனர். மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதுகுறித்த விவரங்களை தற்போது வரை வெளியிடாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை என்று தெரிவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித்துறை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DPI, Teachers