பள்ளி - கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களை பெறுவதற்கான புதிய மின்னணு செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர். அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது.
எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.05.2022 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி TNSED-Schools (இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி) ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வாரப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.