முகப்பு /செய்தி /கல்வி / அதிக லீவு எடுக்கும் டீச்சர்கள்.. லிஸ்ட் கேட்கும் பள்ளிக்கல்வித் துறை

அதிக லீவு எடுக்கும் டீச்சர்கள்.. லிஸ்ட் கேட்கும் பள்ளிக்கல்வித் துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Tamil Nadu

அரசு தொடக்க பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிக்கு நீண்ட காலமாக வராத, நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்:

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.

1. நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள்

2. நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள்

3. தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள்.(அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்).

மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இணையவழி (deesections@gmail.com) மூலம் உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கபெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 உதவித் தொகை: பெற்றோர்களுக்கான முக்கிய அறிவுப்பு இதோ!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளிக்கும் பட்டியலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Education, School education