ஹோம் /நியூஸ் /கல்வி /

TANCET தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

TANCET தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

TANCET 2022 Results Released Check in Tamil: TANCET தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியானது. மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

TANCET 2022 Results Released Check in Tamil: TANCET தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு , அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது.

அதன்படி இந்த ஆண்டு MBA, MCA, M.E, M.Tech, M.Plan, M.Arch., படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2022 டான்செட் நுழைவுத் தேர்வு இந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை இந்த ஆண்டு 36,710 பேர் எழுதினர். இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்.

இந்நிலையில்  TANCET தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். இதற்கான மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

First published:

Tags: Education