TANCET Admit Card 2020 | டான்செட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

TANCET EXAM | Anna University

TANCET Admit Card 2020 | டான்செட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
TANCET EXAM | Anna University
  • News18
  • Last Updated: February 13, 2020, 11:33 AM IST
  • Share this:
எம்.பி.ஏ, எம்.இ ஆகிய உயர் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான டான்செட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல கல்ல அண்ணாமலைப் கழகம், அரசு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர டான்செட் எனும் பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. டான்செட் நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு ஜனவரி 7-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை annauniv.edu.tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இதனை அடுத்தும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

https://tancet.annauniv.edu/cet20/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களது இ-மெயில் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் போது கொடுத்த பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். பின்னர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

எம்.சி.ஏ. படிப்பிற்கு பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு பிப்ரவரி 29-ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மார்ச் 1-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.இவர்களுக்கான தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்விற்கான முடிவுகள் மார்ச் 20-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 23-ம் தேதி தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading