2022 டான்செட் நுழைவுத் தேர்வுக்கான மின்னணு அனுமதி நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னணு அனுமதிச் சீட்டினை, tancet.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்
இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் 23 ஏப்ரல் மாலை 4 மணி வரை பெறப்பட்டன.எம்சிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு, 2022, மே 14ம் தேதி நடைபெறும். தேர்வு நேரம்,காலை 10 மணிமுதல் பகல் 12 மணி வரை.எம்பிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு, 2022, மே 14ம் தேதி பிற்பகல் மணி 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும்.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 2022, மே 15ம் தேதி காலை மணி 10 மணி முதல் 2 மணி வரையிலும் நடைபெறும். ஜூன் மாதம் 10ம் தேதிக்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் திருத்துவதற்கான கடைசி வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் (மே,2) புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை விண்ணபப்தாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். முழு விபரங்களை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு மின்னணு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
நெட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது.. தகுதி, கட்டணம் என்ன?
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 044-22358289 / 044-22358314 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். tancetau@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
அனுமதிச்ச சீட்டு தொடர்புடைய தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்ஃபோன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க:
TNPSC Current Affairs 4: பொது அறிவுப் பிரிவில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.