அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
https://studentrepo.tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் பெயர் இந்த பட்டியலில் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொள்ளலாம். பட்டியலில் விடுபட்ட மாணவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு மேல்முறையீடு செய்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழக பள்ளிக் கல்வி ஆணையர் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசுப் பள்ளிகள் சட்டம் 2021ன்படி அண்மையில் தமிழ்நாட்டில் முற்றிலும் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மட்டுமே பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்தது.
இதையம் வாசிக்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை
இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டினால் பலனடையப் போகும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய சான்றுகள் இணையம் மூலம் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முழுவதுமாக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த இடஒதுக்கீடு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: உத்தேச விடைகளை வெளியிட்ட ரயில்வே வாரியம்: 27ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம்
இந்த 7.5% இடஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ள பொருத்தமான 12 வகுப்பு பயிலும் 2.7 லட்சம் மாணவர்களின் பெயர் கொண்ட பட்டியலை https://snualeurepo taschools.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று மாணவர்கள் தங்கள் மாவட்டத்தையும் பள்ளியின் பெயரையும் தேர்ந்தெடுத்து பட்டியலைப் பார்வையிட்டு தங்கள் பெயர் இப்பட்டியலில் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையோடு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை ஒன்றிணைந்து இரு துறைகளுக்குமிடையே ஒரு தொழில்நுட்பப் பாலமொன்றை உருவாக்கி இருக்கிறது அதன் மூலம் நம் மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்விக்கு எந்தச் சிரமமுமின்றி இந்தத் திட்டத்தை பயன்படுத்தி சென்றுவிட முடியும்.
மேலும் இணையம் மூலம் தன் எமிஸ் ஐடியை பயன்படுத்தி உடனடியாக தன் குறிந்த விவரங்களை மீண்டும் அளித்தால் விரைந்து தீர்வு காணப்படும்.
பட்டியலில் பெயர் விடுபட்ட மாணவர்கள் அதே இணையதளத்தில் பட்டியலை அடுத்து காணப்படும் உங்கள் பெயர் விடுபட்டுள்ளதா? இங்கு க்ளிக் செய்யவும்” என்கிற பொத்தானை அமுக்கி விவரங்களைத் தெரிவித்தால் விரைவில் பள்ளிக்கல்வித்துறை அதை பரிசீலித்து மாணவர்கள் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றது உறுதியானால், அந்த மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College Admission, Reservation