Home /News /education /

TN Budget 2021: தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை!

TN Budget 2021: தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை!

கல்விக் கொள்கை

கல்விக் கொள்கை

25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திற்கு தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

    தமிழகத்தின்  2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்வித் துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  குறிப்பாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றும் இதற்காக  கல்வியாளர்கள், வல்லுநர்கள்  அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இதேபோல், பள்ளிக்கல்விக்கு 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  மலைப்பாங்கான மற்றும் தொலைத்தூர பகுதிகளில்  12 தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.  தமிழ்நாடு முழுக்க 413 கல்வி நிறுவனங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள் வழங்கப்படும். அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய  'எண்ணும் எழுத்தும் இயக்கம்'  ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.

    இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு!


    இதேபோல், புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    மேலும், ‘25 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் விடுதிகள் கட்டப்படும்.

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான இணைவு வழங்கும் பல்கலைக்கழகமாக ஆணை பிறப்பித்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சந்தித்து வரும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும்.

    மேலும் படிக்க: பெட்ரோல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்


    மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக, ஆளில்லா விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும்’ என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: News On Instagram

    அடுத்த செய்தி