முகப்பு /செய்தி /கல்வி / ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணக்க ஏப். 12-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணக்க ஏப். 12-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தேர்விற்கான விண்ணப்பத்தை www.trb.tn.nic.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு 500ரூபாயும்,, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

  • Last Updated :

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கூறியிருந்த நிலையில், 3.63 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் உள்ள தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 1 ஒன்றுதேர்வினை எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.

2-ம் தாளான 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு, பட்டப்படிப்பில் 45 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதற்காக www.trb.tn.nic.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும்,, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான இன்று கால அவகாசத்தை, ஏப்ரல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

top videos

    First published:

    Tags: TET, TNTET, TRB