• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் வேண்டும்.

  • Share this:
    செப்டம்பர் - 2021  ஆண்டு பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பான செய்திக் குறிப்பில், நடைபெற்ற, செப்டம்பர் 2021, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, 19.11.2021-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அரசாணை (டி) எண்.24, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, நாள்.11.09.2021 மற்றும் அரசாணை (2டி) எண்.24, பள்ளிக்கல்வி (அ.தே)த் துறை, நாள்.16.09.2021-ன்படி செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, மாற்றுத் திறனாளி தனித்தேர்வர்களும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி, மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் : 1. தனித்தேர்வர்கள் வருகிற 19.11.2021 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    2. மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன்,

    Notification < SSLC Examination< Provisional Mark Sheet SSLC Result – Sep 2021

    எனத் தோன்றும் வாசகத்தினை Click செய்தால், தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

    மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

    செப்டம்பர் 2021 தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    மறுகூட்டல் (Retotal) கட்டணம் :

    பாடம் (ஒவ்வொன்றிற்கும்) ரூ.205/-

    அரசுத் தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

    முக்கிய குறிப்பு : செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: