Home /News /education /

5 நாட்கள் மட்டுமே அரையாண்டு விடுமுறை... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

5 நாட்கள் மட்டுமே அரையாண்டு விடுமுறை... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின.

ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின.

ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 5 நாட்கள் மட்டுமே அரையாண்டு விடுமுறை என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகளை கவனித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது, தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டன.

    தொடர்ச்சியாக நவம்பர் 1-ம்தேதி ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள், விடுமுறை உள்ளிட்ட காரணமாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழையும், மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளித் தந்தது. இதற்கிடையே, குறிப்பிட்ட காலத்திற்குள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : தமிழகத்தில் இரவு நேர ஊடரங்கிற்கு வாய்ப்பில்லை... முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    இந்த சூழலில், அரையாண்டு விடுமுறை வழங்கப்படுமா என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பரவலாக எழுந்தது. ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின. இந்நிலையில் நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறை குறித்த தகவலை பகிர்ந்தார்.

    இதையும் படிங்க : சிவகங்கை சிறுவனின் அதீத நினைவாற்றல் - சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தல்

    தற்போது, இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : நெல்லை பள்ளி கட்டிட விபத்து - 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்
     எனினும், 25 கிறிஸ்துமஸ், 26 ஞாயிற்றுக்கிழமை, 1 சனிக்கிழமை, 2 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொத்தம் 9 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: School

    அடுத்த செய்தி