2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஜுலை 4ம் தேதியில் காலை 10 மணிக்கு scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும்.
கல்வித் தகுதி:
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பிற்குச் சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், பொதுப்பிரிவினர் (குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC SCA ST) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு (540/1200 - 270/600) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ் ஆங்கிலம்/தெலுங்கு/ உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை 12ம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயாமாகப் பயின்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
31.07-2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது / பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் ஆதி திராவிடர்/ பழங்குடியினருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.
விண்ணப்பத்தினை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 09.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.