சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த தேதியில் இருந்து 5 நாட்கள் வரை பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் (Tamil Nadu Institute of Labour Studies) பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு (PGDLA Part- time), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் ( DLLAL _ weekend வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை); எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.என்.ஏ மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.
பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை) எம்.ஏ தொழிலாளர் மேலாண்மை பிஜிடிஎல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட/ பட்டமேற்படிப்பு/பட்டய படிப்புகள்
தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு (Assistant Commissioner of Labour) பிரத்யோக கல்வித் தருதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு
தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிவாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை) எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பிஜிடிஎல்ஏ ஆகிய பட்ட/ பட்டமேற்படிப்பு/பட்டய படிப்புகளை
முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ள 12 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதையும் வாசிக்க:
இலவச ஐஏஎஸ் பயிற்சி: சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு 1 கோடியே 67 லட்சம் ரூபாய் விடுவிப்பு
விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
20.06.2022 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ 200/- (SC/ST) ரூ 100/-) வங்கி வரைவோலையினை "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால்/ விரைவு அஞ்சல்/ கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதையும் வாசிக்க: போலியான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பி.ஏ (தொழிலாளர் மோண்மை) பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த தேதியில் இருந்து 5 நாட்கள் வரை.
இளநிலை படிப்புகளுக்கான முடிவுகள் வந்த பிறகு எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு, பிஜி.டி.எல்.ஏ (பகுதி நேரம்) மற்றும் டி.எல்.எல், ஏ.எல் (பகுதி நேர வார இறுதி) பட்டய படிப்புக்களுக்கான விண்ணப்ப செயல்முறை முடிவடையும்.
மேலும் விவரங்களுக்கு
ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)
முனைவர் இரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர் Mob No. 9884159410
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை,மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்)
அம்பத்தூர், சென்னை 600 098
தொலைபேசி எண் : 044-29667885/ 29567886
மின்னஞ்சல் முகவரி: tilschennai@tn.gov in
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.