தமிழ்கத்தில் இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலடத்திலும், விருதுநகர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், மதுரை,அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இதில், கவனிக்கத்தக்க விதமாக, எழுத்தறிவு, நகர்ப்புற வளர்ச்சி, எஸ்சி/எஸ்டி பிரிவினர் கல்வியறிவு விகிதம், பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு குறியீடு பட்டியலில் பின்தங்கியுள்ள பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம்போன்ற மாவட்டங்கள் இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளன.
மாவட்டம் | 2022 12ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் |
பெரம்பலூர் | 97.95 |
விருதுநகர் | 97.27 |
ராமநாதபுரம் | 97.02 |
கோயம்பத்தூர் | 96.91 |
மதுரை | 96.89 |
அரியலூர் | 96.47 |
தூத்துக்குடி | 96.44 |
திருநெல்வேலி | 96.07 |
சமூக குறியீடுகள்:
மாவட்டங்கள் | நகர்ப்புற விகிதம் | கல்வியறிவு விகிதம் | மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு பெண்கள் விகிதம் | எஸ்சி/எஸ்டி பிரிவினரின் கல்வியறிவு விகிதம் |
பெரம்பலூர் | 17.19% | 74.32% | 1003 | எஸ்.சி - 71% எஸ்.டி - 65% |
விருதுநகர் | 50% | 80.15% | 1007 | எஸ்.சி-72% எஸ்.டி 63% |
ராமநாதபுரம் | 30.30% | 80.72% | 983 | எஸ்.சி-73%, எஸ்.டி 62% |
கோயம்பத்தூர் | 75.73% | 83.98% | 1000 | எஸ்.சி-68%, எஸ்.டி55% |
மதுரை | 60.78% | 83.45% | 990 | எஸ்.சி-73%, எஸ்.டி 71% |
அரியலூர் | 11.10% | 71.34% | 1015 | எஸ்.சி-64%, எஸ்.டி50% |
தூத்துக்குடி | 50.10% | 86.16% | 1023 | எஸ்.சி-79%, எஸ்.டி65% |
திருநெல்வேலி | 49.40% | 82.50% | 1023 | எஸ்.சி-75%, எஸ்.டி69% |
கடைசி மூன்று இடங்கள்:
நகர்ப்புற வளர்ச்சி விகிதம் | கல்வியறிவு விகிதம் | மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு பெண்கள் விகிதம் | எஸ்சி/எஸ்டி பிரிவினரின் கல்வியறிவு விகிதம் | |
கிருஷ்ணகிரி | 22% | 71.46% | 958 | எஸ்சி -68 எஸ்டி -47 |
திருவண்ணாமலை | 20% | 74.21% | 994 | எஸ்சி -71 எஸ்டி -46 |
வேலூர் | 43.24% | 79.17% | 1007 | எஸ்சி -79 எஸ்டி -50 |
புரிந்து கொள்ள வேண்டியவை:
முதல் 10 இடங்களில், கோயம்பத்தூர், மதுரை, தூத்துக்குடி நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 83% மக்கள் கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
முதல் 10 மாவட்டங்களில், ராமநாதபுரம், மதுரை நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களிலும் பாலின விகிதம் சமமாகவும், கூடுதலாகவும் உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1023 பெண்கள் உள்ளார்.
இதையும் வாசிக்க: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு; தமிழில் ஒருவர் மட்டுமே சதம்
முதல் 10 இடங்களில், பெரம்பலூர் மாவட்டம் நீங்கலாக, மாவட்டத்தின் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதத்துக்கும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் கல்வியறிவுக்கும் உள்ள இடைவெளி (Literacy Rate between Total population and SC/ST population) அதிகமாக உள்ளது.
கடைசி மூன்று இடங்களில், வேலூர் நீங்கலாக, பிற மாவட்டங்களில் சமமற்ற பாலின சமத்துவம் நிலவுகிறது. எனவே, பாடசாலைகளைத் தாண்டி, நிலையான சமூக வளர்ச்சி இலக்குகளும் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரிய வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.