ஹோம் /நியூஸ் /கல்வி /

கல்வி செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் 3வது நிலைக்கு சறுக்கிய தமிழகம்!

கல்வி செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் 3வது நிலைக்கு சறுக்கிய தமிழகம்!

பள்ளி

பள்ளி

ஆளுகை, செயல்முறை, கற்றல் விளைவுகளை அணுகல், உள்கட்டமைப்பு & வசதிகள் ஈக்விட்டி உள்ளிட்ட ஐந்து களங்களாக பிரிக்கப்பட்டு 1000 புள்ளிகளுக்கு மதிப்பிடப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கல்வி அமைச்சகம் (MoE) 2020-21 கல்வியாண்டிற்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டை (PGI) வெளியிட்டுள்ளது. PGI 2020-21 அறிக்கையின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மூன்றாவது நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு:

Performing Grade Index என்பது 70 அளவீடுகள் அடிப்படையில் 1000 புள்ளிகள் என்ற அளவீட்டைக் கொண்டு ஆளுகை மேலாண்மை மற்றும் விளைவுகள்  வகைகளாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.

இந்த பண்புகள் ஆளுகை, செயல்முறை, கற்றல் விளைவுகளை அணுகல், உள்கட்டமைப்பு & வசதிகள் ஈக்விட்டி உள்ளிட்ட ஐந்து களங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. PGI 2020-21, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பத்து கிரேடுகளாகப் பிரித்தது.

நிலை 1951-1000
நிலை 2901-950
நிலை 3851-900
நிலை 4801-850
நிலை 5751-800
நிலை 6701-750
நிலை 7651-700
நிலை 8601-650

PGI 2020-21 அறிக்கையில், கேரளா, பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 901 முதல் 950 புள்ளிகள் பெற்று PGI 2020-21 இல் நிலை 2 ஐ எட்டியுள்ளன.

இந்திய அளவில் கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகபட்சமாக 928 புள்ளிகள் பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக சண்டிகர், குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முறையே 927, 903, 903 மற்றும் 902 புள்ளிகளைப் பெற்று விளங்குகிறது. இன்று வரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சதவிகித உயர்வை எட்டிய புதிய மாநிலங்களாக மாறியுள்ளன.

இனி தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பட்டியலில் அதற்கு அடுத்து grade I+ என்ற தர நிலையில் தமிழகம்,டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ பன்னிரண்டு மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்கள்  வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் தமிழகம் 1000 புள்ளிகளுக்கு 855 புள்ளிகளையும் புதுச்சேரி 897 புள்ளிகளையும் பெற்றுள்ளது. 2019-2020 கல்வியாண்டில் தமிழகம் 906 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிதாக உருவாக்கப்பட்ட UT, லடாக் PGI இல் 2020-21 இல் நிலை 8 முதல் நிலை 4 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.2019-20 உடன் ஒப்பிடும்போது 2020-21 இல் அதன் மதிப்பெண்ணை 299 புள்ளிகளால் மேம்படுத்தி ஒரு வருடத்தில் அதிக முற்றம் காட்டியுள்ள யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.

669 புள்ளிகள் பெற்று  நான்காம் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலம் கடைசி இடத்தில உள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Education, Tamilnadu