Home /News /education /

"கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனி குறுகி நிக்காதே" : வைரலாகும் பள்ளி மாணவர்களின் வீடியோ

"கை கட்டாதே, வாய் பொத்தாதே, கூனி குறுகி நிக்காதே" : வைரலாகும் பள்ளி மாணவர்களின் வீடியோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்வி தொடர்பான மாற்றுவகை சொல்லாடல்கள், சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    குழந்தைகள் மீதான சுரண்டல்கள், குடும்ப வன்முறைகள், பள்ளித் தண்டனைகள், அச்சுறுத்தல்கள் பெருகி வரும் வேளையில், சமூக ஊடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.

    வீடியோவில், "கை கட்டாதே , வாய் பொத்தாதே, கலகலவென்று பேசிப்பழகு, கூனி குறுகி நிக்காதே, எதையும் ஏன்? எதற்கு? என்று கேளு"  என்ற கருத்தை வலியுறுத்தி நிற்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

     



    தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்வி தொடர்பான மாற்றுவகை சொல்லாடல்கள், சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  அதன் படி, ஒவ்வொரு வாரத்திற்கும் வாரம் ஒருநாள் நூலகப் பாடவேளை, கலைப் போட்டிகள், வினாடி வினா போட்டிகள், நாடகங்களில் நடித்து பயிற்சி பெறுவது போன்ற முன்னெடுப்புகளை  மேற்கொண்டு வருகிறது.

    இதையும் வாசிக்க:   பள்ளி திறப்பு.. வகுப்பறையில் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    மேலும், பள்ளியைப் பற்றி நாம்  கொண்டிருக்கும் முன்கூட்டிய புரிதல்களை மாற்றக்கூடிய சில கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். முன்னதாக,  பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறு கட்டமைப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், " ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது உங்களுடைய கல்வி மட்டும்தான்" என்று தெரிவித்தார்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால் அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவா்கள் லட்சம் பேரை நாம் காட்ட முடியும்.

    படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல. அது வெறும் ஆசை வாா்த்தை. இவா்களெல்லாம் படித்து முன்னேறுகிறாா்களே என்ற எரிச்சலில் தவறான பாதையைக் காட்டும் சூழ்ச்சி அது. எனவே, குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் படிப்பு மட்டும்தான் முக்கியம். இதுவே எனது அன்பான வேண்டுகோள்" என்று தெரிவித்தார்.

    இரு தினங்களுக்கு முன்னதாக, கல்லூரி கனவு திட்டத்தை துவங்கி வைத்து பேசிய முதல்வர், " கல்வியை சிறுமைப்படுத்தி பேசக்கூடிய யாருடைய பேச்சையும் நீங்கள் வாங்கி கொள்ளாதீர்கள்" என்று கூறினார்.

    இதையும் வாசிக்கபள்ளி மாணவர்களுக்காக ‘பத்திரிகை’... ரூ 7.15 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

    எனவே, தமிழகத்தில் கல்வி பற்றிய மதிப்பீடு  மறுவாசிப்புக்கு உட்பட்டு வருகிறது. அளவு கடந்த உறுதிபாட்டுடன் பாடும் மாணவர்களின் பாடல் வரிகளும், அவர்களின் அசைவுகளும்  அதையே வெளிப்படுத்துகின்றன. 
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி