தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக்கொள்கை உதவி புரியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகம் புதுதில்லி தலைவர் (பொறுப்பு) கனகசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரது கனவை நனைவாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு உதவும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் உயர் தர கல்வியை வழங்க உறுதியேற்க வேண்டும்.
தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக்கொள்கை உதவி புரியும். இதில், கற்றல் முடிவுகளை எடுத்தல், துறைகளைப் பிரித்தல், வரையறுக்கப்பட்ட அணுகுமுறை, குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர் மற்றும் நிறுவன சுயாட்சிக்கு கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கல்வியை உள்ளடக்கிய மற்றும் நவீனமாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை உயர் கல்விக்குத் தயார்படுத்துவதற்கான ப்ரேர்னா திட்டம், ஸ்டார்ட் அப்களை அமைப்பதற்கான சம்ரித்தித் திட்டம், மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு வழங்கப்படும் எஸ்எஸ்பிசிஏ திட்டம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன என்றார்.
முன்னதாக இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு அளிக்க வேண்டும்.மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்று கொள்ளலாம், ஆனால் மூன்றாவது மொழி கற்க கட்டாயப்படுத்த கூடாது” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.