ஹோம் /நியூஸ் /கல்வி /

JEE தேர்வு: தமிழக மாணவர்களுக்கு விதிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு கோரிக்கை

JEE தேர்வு: தமிழக மாணவர்களுக்கு விதிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு கோரிக்கை

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மாணவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க மதிப்பெண் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு கொரோனொ காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளதால் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிபதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கோரிக்கைக்கு இணங்க அரசு தேர்வுகள் துறை மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் 30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசின் தேர்வுத்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். கூட்டு நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை சில தளர்வுகளை அளித்தால் தவிர, இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: Entrance Exam, Jee, School students