10,12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15-ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள்..

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில  உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

10,12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15-ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள்..
அரசுப்பள்ளி மாணவிகள்
  • Share this:
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில  உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை-15ம்  தேதி புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மாணவர்கள் எந்த தினத்தில் புத்தகங்களை பெற பள்ளிக்கு வரவேண்டும் என்பதை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விலையில்லா பாடப்புத்தகங்கள் குறித்த அறிக்கைஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட நாளன்று 1 மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என்கிற அளவில் மாணவர்களை வரவழைத்து சமூக இடைவெளியுடன் பாடப்புத்தகங்கள்  வழங்க வேண்டும் என்றும்
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், அவர்கள் பகுதிகளில் பாதிப்பு நீங்கியபிறகு,  மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளிகளுக்கு வந்து பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading