பொறியியல் படிப்புக்களுக்கு இன்று மாலை 6 மணி முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணங்களை
www.tneaonline.org என்கிற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க அக்டோபர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதாகவும், ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 21-ம் தேதி சம வாய்ப்பு எண் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் 7-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் மட்டும் நடைபெறும் என்றும், விளையாட்டு பிரிவினருக்கு மட்டும் நேரில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவித்தார்..மேலும், இந்தாண்டு கலந்தாய்விற்காக 52 சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்கள் செல்போன் மூலமாகவே சான்றிதழை பதிவேற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது வரை பொறியியல் படிப்புக்காக 465 கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதாகவும், ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கல்லூரிகள் விண்ணப்பிக்க காலஅவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி கல்லூரி கட்டண தொகையை 3 பிரிவாக செலுத்தலாம் என்றும், கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தும் கல்லூரிகள் மீது அரசிடம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். முழுமையாக கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட பின்னர் தான் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வை நடத்துவது தொடர்பாக உயர்கல்வி துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்.. இதுகுறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் குறித்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
படிக்க:
கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்
படிக்க:
கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் இன்னும் சில தினங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்
பொறியியல் கலந்தாய்வின் விவரம்:
1) இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை இன்று 6 மணி முதல் பொறியியல் மாணவர்கள் பதிவு செய்யலாம்
2) விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதிநாள் 16.08.20
3) அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய ஆரம்பம் நாள் 31.07.20
4) அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 20.08.20
5) ரேண்டம் நம்பர் ஒதுக்கப்படும் நாள் 21.08.20
6) சேவை மையம் வாயிலாக அசல் சான்றிதழ்களை சரிபார்க்கும் நாட்கள் 24.08.20 to 01.09.20
7) தர வரிசை பட்டியல் 07.09.20
8) சிறப்பு ஒதுக்கீடு பிரிவிற்கான கலந்தாய்வு - விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு கலந்தாய்வு 10.09.20 to 14.09.20
9) பொதுக் கலந்தாய்வு 17.09.20 to 06.10.20
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.