Home /News /education /

பொறியியல் படிப்பிற்கான பொதுக் கலந்தாய்வு துவங்கியது..!

பொறியியல் படிப்பிற்கான பொதுக் கலந்தாய்வு துவங்கியது..!

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த பொது கலந்தாய்வு வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2022-23 கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் துவங்கியது. 

    மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான பொது மாணவர் சேர்க்கையை (Common Admission ) தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்துகிறது.

    முன்னதாக, சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர் ஆகிய பிரிவினர் இதில் கலந்து கொண்டனர்.

    1,30,000-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த பொது கலந்தாய்வு வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழகத்தில் பொறியியல் பட்டயப் படிப்பிற்கு ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2.10 லட்சமாக உள்ளன. இதில்,1,51,870 இடங்கள் பொறியியல் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. 11,000-க்கும் மேற்பட்ட இடங்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தவிர்க்க முடியாத சூழல் காரணமாக பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாத மானவர்களுக்கான துணை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. அதேபோன்று, ஆதிதிராவிட அருந்ததியர் காலியிடம் ஆதிதிராவிடர் (SCA to SC Counselling) கலந்தாய்வு வரும் நவம்பர் 19 முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக, கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    நற்பெயர் பெற்ற கல்லூரிகளின் பட்டியல் :  

















































































































    கல்லூரி20212020201920182017சராசரிமக்கள் மத்தியில் உள்ள நற்பெயர்
    அண்ணா பல்கலைக்கழக வளாகம் 199.00198.25198.00199.50199.75198.90  1
    அண்ணா பல்கலைக்கழகம் - எம்ஐடி 197.18195.00194.50 198.00 198.75196.692
    கோயம்பத்தூர் - பிஎஸ்ஜி கல்லூரி197.50193.75194.50198.50199.00196.65 3
    சிவ சுப்ரமணிய நாடார் கல்லூரி197.00194.00193.00196.00197.50195.504
    கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி194.90190.50190.00196.75198.00194.035
    மதுரை - தியாகராஜர் பொறியியல் கல்லூரி195.02190.00190.50196.50198.00194.006
    கோயம்பத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி194.62190.00190.00195.75197.50193.577
    கோயம்பத்தூர் - பிஎஸ்ஜி கல்லூரி  மற்றும் பயன்பாடு ஆராய்ச்சி194.33190.00190.00195.25196.50193.228
    சென்னை - ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி193.79190.00189.00194.00196.25192.619
    கோயம்பத்தூர் - குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி193.49188.50187.00194.75196.50192.0510

    தரவரிசையின் முதல் 10 இடங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Engineering counselling, Engineering student

    அடுத்த செய்தி