Home /News /education /

தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை  அறிவித்துள்ளது. 

     தமிழகத்தில் செயல்படும் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட  கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி கல்லூரிகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


     

    Also Read: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுப்பு - பள்ளிக்கல்வித்துறை

    சென்னை தலைமை செயலகத்தில்  நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு, ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும், தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் தேர்வு தள்ளிப்போயுள்ளது என்றும் தெரிவித்தார். தேர்வுக்கான தேதி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கியிருந்தார்.   கொரோனா பரவலை கருத்தில் கொண்டு எந்த தேதியில் எப்படி தேர்வு நடத்துவது என்பதை கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் கூறியிருந்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: College student, Education, Higher education, Holiday

    அடுத்த செய்தி