Home /News /education /

பள்ளி கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடருமா?.. முதல்வர் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை

பள்ளி கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடருமா?.. முதல்வர் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பள்ளி, கல்லூரிகளுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து நாளை முக்கிய முடிவு

தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்தது.  இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.  இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சுட்டிகாட்டி கடிதம் எழுதியுள்ளது.  ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் , நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுழற்சிமுறை வகுப்புகளை சில மாதங்களுக்கு தொடர்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு சுழற்சி முறை வகுப்புகள் நடைபெற்றும் வரும் நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும்.

Also Read:  நகைக்கடன் தள்ளுபடி.. யார் யாருக்கு பலன் கிடைக்கும் - விவரங்கள் இதோ

இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்-லைன் வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என்கிற  கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் , ஆன்-லைன் வழியில் வகுப்புகளை நடத்துவது,  தேர்வை நடத்துவது குறித்து பரீசிலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய  சூழலில் முதல்வர் தலைமையில் நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில்,  பள்ளி,  கல்லூரிகளுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Department of School Education, Education, MKStalin, Online class, Tn schools

அடுத்த செய்தி