10, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

news18
Updated: June 12, 2018, 10:51 PM IST
10, +1, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
கோப்புப் படம்
news18
Updated: June 12, 2018, 10:51 PM IST
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வுக்கு தயாராவதற்காக பொதுத்தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலையை தவிர்ப்பதற்காக, கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு தயாராக உள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆங்கில மோகத்தால் பெற்றோர், தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் செங்கோட்டையன்.

First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...