கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை: இளங்கலை படிப்புகளுக்கு அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்..

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கும் தேதியை  அக்டோபர் 5ம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாகம் நீடித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை: இளங்கலை படிப்புகளுக்கு அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம்..
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 3:38 PM IST
  • Share this:
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

இவற்றிலுள்ள 10 இளங்கலை படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை ஆன்லைன் மூலம் 45,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Also read: பள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..


ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீடித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



மேலும், தரவரிசைப் பட்டியலும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்குமாறு பெற்றோர் அளித்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை நிர்வாகம் இந்த கால நீட்டிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading