முகப்பு /செய்தி /கல்வி / TN 12th Exam 2023: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு - முழு அட்டவணை இதோ...!

TN 12th Exam 2023: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு - முழு அட்டவணை இதோ...!

காட்சிப்படம்

காட்சிப்படம்

12 வகுப்பு (+2 EXAMINATION MARCH / APRIL -2023) பொதுத் தேர்வுகள் அட்டவணை மற்றும் முடிவு தேதி குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளைத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகளுக்கு நடுவே போதுமான இடைவெளியுடன் தேர்வு நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதிபாடம்
13.03.2023LANGUAGE
15.03.2023ENGLISH
17.03.2023COMMUNICATIVE ENGLISHETHICS AND INDIAN CULTURECOMPUTER SCIENCECOMPUTER APPLICATIONSBIO-CHEMISTRYADVANCED LANGUAGE(TAMIL)HOME SCIENCEPOLITICAL SCIENCESTATISTICSNURSING VOCATIONALBASIC ELECTRICAL ENGINEERING
21.03.2023PHYSICSECONOMICSCOMPUTER TECHNOLOGY
27.03.2023MATHEMATICSZOOLOGYCOMMERCEMICRO BIOLOGYNUTRITION AND DIETETICSTEXTILE & DRESS DESIGNINGFOOD SERVICE MANAGEMENTAGRICULTURAL SCIENCENURSING (General)
31.03.2023BIOLOGYBOTANYHISTORYBUSINESS MATHEMATICS AND STATISTICSBASIC ELECTRONICS ENGINEERINGBASIC CIVIL ENGINEERINGBASIC AUTOMOBILE ENGINEERINGBASIC MECHANICAL ENGINEERINGTEXTILE TECHNOLOGYOFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
03.04.2023CHEMISTRYACCOUNTANCYGEOGRAPHY

காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கும். 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் படிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்படும். 10.10 முதல் 10.15 வரை மாணவர்களில் விவரங்கள் சரிபார்க்கப்படும். 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கலாம். மதியம் 1.15 வரை தேர்வு நடைபெறும்.

Also Read : TN 10th Exam, Result 2023: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழு விவரங்கள் இதோ..!

தேர்வு முடிவு தேதி: மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு, 8 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஒரு மாத கால இடைவெளியில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

First published:

Tags: 12th exam, 12th Exam results, Public exams