முகப்பு /செய்தி /கல்வி / 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - மார்ச் 3 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - மார்ச் 3 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

TN Exam Hall ticket : 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான ஹால்டிகெட்டை மார்ச் 3 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதால் மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில்,  “ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான  https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : "6 வயது நிரம்பினால் மட்டுமே 1ம் வகுப்பு"- கல்வித்துறை அதிரடி உத்தரவு

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் நாளில் இருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதே போல், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: 11th Exam, 12th exam, Public exams