ஹோம் /நியூஸ் /கல்வி /

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு

காட்சிப் படம்

காட்சிப் படம்

தேர்வு கால அட்டவணைகளையும், தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களையும்  https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த/வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ’நடந்து முடிந்த 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வு வருகை தராத மாணவர்கள், தேர்ச்சி பெறாது பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோன்று, தனித்தேர்வர்கள் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கCUET UG Exam Date: கியூட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு  

  சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

  10ம் வகுப்பு தேர்வுக் கட்டணம்: 

  தேர்வுக் கட்டணம்ரூ.125
  ஆன்-லைன் பதிவு கட்டணம்ரூ.50
  மொத்தக் கட்டணம்ரூ.175

  12ம் வகுப்பு தேர்வுக் கட்டணம்: 

  ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் மற்றும் 11ம் வகுப்பு  பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள்ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ-50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50
  12ம் வகுப்பு தேர்வினை முதன்முறையாக எழுதவுள்ள தேர்வர்கள்தேர்வுக் கட்டணம் ரூ.150இதரக் கட்டணம் ரூ.35மொத்தம் ரூ.185ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50

  தேர்வு அட்டவணை: 

  12ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  11ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  தேர்வு கால அட்டவணைகளையும், தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களையும் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 10th Exam Result, 12th Exam results