Tamil Talent Search Examination, October 2022 Results : தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 15ம் நடைபெற்றது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஊக்கத் தொகைக்கான பட்டியலை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. பட்டியலில், 50 விழுக்காடு (750 பேர்) அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் வாசிக்க: சென்னை ஐஐடி-யில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில், போளூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார்.அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியலில், ஆயக்காரன்புலம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநயா முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கியத்திறனறித்தேர்வு முடிவுகள்- அக்டோபர் 2022 தேர்வு முடிவுகள்:
தேர்வெழுதிய மாணவர்கள், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
https://apply1.tndge.org/ttse-result-2022 என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும்
உங்கள் பதிவெண், பிறந்த தேதி விவரங்களை சமர்ப்பிக்கவும்.
தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education